Advertisment

முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது!

ரகத

Advertisment

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சி தேரத்ல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இதுஒருபுறம் இருக்க மாவட்டங்களில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் மனு கொடுத்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் எனவும்கூறி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்த்த காவல்துறையினர் மூன்று மணி நேரமாக தர்ணாவை தொடர்ந்ததால் வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.

admk arrest velumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe