SP Sree Abhinav Action, 40 Chief Constables transferred to Prohibition Division

Advertisment

சேலம் மாவட்டக் காவல்துறையில் தனிப்பிரிவில் பணியாற்றிவந்த தலைமைக் காவலர்கள், சிறப்பு எஸ்.ஐக்கள் ஆகியோர் அண்மையில் ஒரே நாளில் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட மதுவிலக்குப் பிரிவில் பணியாற்ற ஆர்வம் உள்ள தலைமைக் காவலர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

உள்ளூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த தலைமைக் காவலர்கள் பலர், மதுவிலக்குப் பிரிவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, விருப்ப மனு அளித்திருந்தவர்களில் 40 தலைமைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இரும்பாலை, மேட்டூர், ஆத்தூர் ஆகிய மூன்று மதுவிலக்குப் பிரிவு காவல் நிலையங்களுக்குமாறுதல் ஆணை வழங்கி மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.