Advertisment

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!! வற்றிய அணைகளுக்கு நீர்வரத்து!!

கடந்த கால வடகிழக்குப் பருவ மழை தீய்ந்து போனதின் காரணமாக வற்றாத ஜீவ நதியான தென்மாவட்டத்தின் தாமிரபரணியாறு வற்றிப்போகதொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டத்தின் பார்வையால். அதன் முந்தைய கோடைப் பருவமான தென் மேற்குப் பருவமழையினால் மே, ஜூன், ஜூலை தொடர் மாதங்களில் நான்ஸ்டாப்பாக பெருக்கெடுத்தது வெள்ளம். வாராத தேவதையாக வந்து கொட்டிய மழையின் பலனாக நெல்லை மாவட்டத்தினுள்ள குறிப்பாக தென் மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய ஆறு அணைகளும் நிரம்பி மறுகால் ஓடியது கோடைகால ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

Advertisment

Southwest monsoon rain started!!

இதனால தாமிரபரணியை குடிநீர் ஆதாராமாக நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற நான்கு மாவட்ட மக்களும் பயனடைந்தனர். அதன்பின் செப்டம்பர் அக்டோபரில் பொழியும் வடகிழக்கு பருவமழை காலைவாரியதால் கோடையில் நிரம்பிய அணைநீர் நான்கு மாவட்ட மக்களுக்கும் தொடர்ந்து உதவியது. ஒரு லெவலுக்கு மேல் போனதும் அணைகள் வறண்டன. வழக்கமான கோடை அக்னி வெயில் கடந்த பிப்ரவரி முதல் ஜூன் ஆரம்பம் வரை நான்கு மாதங்கள் கொளுத்தி எடுத்தது.

Advertisment

Southwest monsoon rain started!!

வெப்பத்தில் உச்ச அளவு கோல் 105 டிகிரி சென்ட்டிகிரேடாக உயர்ந்தது. இதன்விளைவு அணைகளின் வறட்சி காரணமாக நான்கு மாவட்டத்திலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுமக்கள் துயரத்திற்குள்ளார்கள்.சோதனையாக நெல்லை மாவட்டத்தைக் கோடையில் காப்பாற்றுகிற தென்மேற்கு பருவமழை மே இறுதியில் தொடங்க வேண்டியது 10 நாட்கள் தாமதமானது.

Southwest monsoon rain started!!

இதனிடையே நேற்றிரவு தென்மேற்குப் பருவ மழை கேரளாவின் கொட்டத் தொடங்கியது, பத்தனம் திட்டா, கொல்லம் ஆரியங்காவு பகுதிகளில் பெய்ததின் விளைவு நெல்லை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்ததால் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்தது. தாமிரபரணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 7 மி.மீ மழை பெய்ய, தண்ணீர் ஊற்றெடுத்து பாபநாசம் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக 47.11 கன அடியாகி ஒரே நாளில் 12 அடி அணைநீர் உயர்ந்து 31 அடியானது. இது, வரும் நாட்களில் உயரும் என்கிறார்கள் கண்காணிப்பு பொறியாளர்கள்.

நம்புவோம். நம்பிக்கை கொடுத்திருக்கிறது தென்மேற்குப் பருவமழை.

nellai rain tutucorin weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe