தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சுவாமி சங்கரதாஸ் அணிஇடையே போட்டி நடைபெறுகிறது.நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சுவாமி சங்கரதாஸ் அணிஇடையே போட்டி நடைபெறுகிறது. பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். அதேபோல் பாண்டவர் அணிசார்பில் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர்.

Advertisment

சுவாமி சங்கரதாஸ் அணியில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயாஆகியோர் போட்டியிடுகின்றனர். சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு பிரசாத்போட்டியிடுகிறார்.

Advertisment