Skip to main content

ரயில் சேவை குறித்து வெளியான வதந்தி... தெற்கு ரயில்வே விளக்கம்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Southern Railway inform

 

இன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இன்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தவறான தகவல்கள் வெளியானதை அடுத்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில் சேவை ரத்து கிடையாது. திட்டமிட்டபடி ரயில்கள் இயக்கப்படும். வெளிமாநிலங்களுக்குத் தொடர்ந்து விரைவு ரயில்கள் இயக்கப்படும். வடமாநிலத் தொழிலாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். காத்திருப்பு பட்டியல் அதிகம் இருக்கும் சூழலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்