Advertisment

தென்னக ரயில்வே சார்பில் கோடைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

southern railway announced summer special trains time table 

கோடைக்கால சிறப்பு ரயில்கள் தென்னக இரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடைக்கால விடுமுறை என்பதால்ரயில்களில்வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

அதன்படி கொச்சுவேலியில் (திருவனந்தபுரம்) (06083) இருந்து பெங்களூர் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் வரும் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.05 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும். கொல்லம், காயம் குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவாளா, செங்கனசேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு , கோயம்புத்தூர் ஜங்ஷன், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக பெங்களூர் பேட், கிருஷ்ணாராஜாபுரத்திற்கு 27 ஆம் தேதி காலை 10:55 மணிக்கு மணிக்கு சென்றடைகிறது. இதில் மூன்று ஏசி டயர் கோச்சுகள், 16 ஸ்லீப்பர் கோச்சுகள், லக்கேஜ் கோச்சுகள் உள்ளன. இதேபோல் பெங்களூரில் இருந்து (06084) கொச்சுவேலி வரும் மாதாந்திர சிறப்பு ரயில் வரும் 26 ஆம் தேதி (புதன் கிழமை) 12. 45 மணிக்கு கிளம்பி 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடைகிறது.

Advertisment

இதைப்போல் வாராந்திர சிறப்பு ரயிலாக தாம்பரம் முதல் மங்களூர் வரை இயக்கப்படுகிறது. வண்டி எண் (06041) தாம்பரத்தில் இருந்து வரும் 25 ஆம்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்படும். சென்னை எக்மோர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஓட்ட பாலம், சோரனூர், குட்டிபுரம், திருர், பராக், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, கண்ணூர், பையனூர், கன்காங்கத் வழியாக கசராகார்ட் சென்றடைகிறது.

இதே போல் (O6O42) மங்களூரில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்புவாராந்திர ரெயில் வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயில் 28 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டு ஏசி டயர் கோச்சுகள், 3 ஏசி டயர் கோச்சுகள், 12 ஸ்லீப்பர் கோச்சுகள், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இரண்டு மற்றும் லக்கேஜ் பெட்டிகள் உள்ளன.

summer Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe