South Korea University Professor Arogya Raju Linguistics Award

Advertisment

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது, இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் என உயர் அந்தஸ்தில் இருக்கும் தமிழர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் வெளிநாடுகளில் உயர் பொறுப்பில் இருக்கும் தமிழர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பலருக்கு விருதுகள் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எஸ். ஆரோக்கியராஜுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருதும், ரூ. 2 லட்சத்திற்கான காசோலையும் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.