Advertisment

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமித்ததற்கு எதிரான வழக்கு!- வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக கீதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

Advertisment

நடிகர் சங்க நிர்வாகப் பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் பொருளாளர் நடிகர் கார்த்தி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. நடிகர் சங்கம் தரப்பில், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியாக கீதாவை நியமித்தது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. மேலும், 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கத்தில் வெறும் 3 உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது தவறானது எனவும் நடிகர் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

south indian artists  association chennai high court

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவராக இருந்த நாசர், பொருளாராக இருந்த கார்த்தி, சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழக வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ அல்லது ஓராண்டிற்கு மட்டுமோ, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

Advertisment

அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

Chennai high court tamilnadu artistes association
இதையும் படியுங்கள்
Subscribe