Advertisment

தென் சென்னை தமிழ்ச்சங்க முப்பெரும் விழா!  படைப்பாளிகளுக்கு விருதுகள்!

தென் சென்னைத் தமிழ்ச் சங்கமும் மக்கள் நல அறக்கட்டளையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா சென்னை வடபழனி லீ கிளப்பில், முழுநாள் விழாவாக சிறப்புற நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் மருத்துவர் ம.ஜீவரேகா தலைமை ஏற்றார். கவிஞர் கோகுலன் ஆனந்தா வரவேற்புரையாற்ற, நிகழ்வை கவிஞர் முத்து விஜயன் கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார். நக்கீரன் முதன்மைத் துணையாசிரியர் ஆரூர் தமிழ்நாடன், தமிழ் இந்து முதன்மைத் துணை ஆசிரியர் மானா பாஸ்கரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க, திரைப்படப் பாடலாசிரியர் அருண்பாரதி விழா மலரை வெளியிட்டார்.

Advertisment

l

இதைத் தொடர்ந்து கவிஞர் தமிழ்மணவாளன் தலைமையில் கவியரங்கம் தொடங்கியது. இதில், பரணி சுபசேகர், அன்புச்செல்வி சுப்புராஜ், விஜய கல்யாணி, யுகபுத்திரன், கவிஞர் ஜெயந்தி ராஜகோபால், கவிஞர் ராஜ்குமார் சிவன் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த விழாவில் தமிழ் ஆளுமைகளான கவிஞர் தமிழ்மணவாளன் , முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர், சொல்லின் செல்வர் ஆவடிக் குமார் ஆகியோர் பாராட்டி சிறப்பிக்கப்பட்டனர்.

Advertisment

l

இந்த நிகழ்ச்சியில், ஆ.ராஜா. கோவை கோகுலன்,சண்முகம் ராணி, விஜி மோகன், இலாசர் வேளாங்கண்ணி, கவிஞர் சங்கர், புலவர் செம்மங்குடி துரையரசன், முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர் மு.செல்வி. முனைவர் நா.சுலோச்சனா ஆகியோருக்கு ’தமிழ்ப்பணிச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

l

இதேபோல் முனைவர் மல்லிகா, கவிஞர் பரணி சுபசேகர் ஆகியோருக்கு பைந்தமிழ்ச் செம்மல் விருதும், கவிஞர் வைதேகி ஸ்ரீதரன், முனியப்பன் ஆகியோருக்கு ’சேவைச் செம்மல்’ விருதும், சேர்மன் துரை, பேசில்ராஜ், கவிஞர் சுமதி சங்கர், கவிஞர் முத்துவிஜயன் ஆகியோருக்கு ’தமிழ்ச்சுடர் விருதும், கவிஞர் தேவகி ராமலிங்கம், கவிஞர் சொர்ணபாரதி ஆகியோருக்கு ’இலக்கியச் செம்மல்’ விருதும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பேசிய அனைவரும், தமிழுக்கு ஊறு விளைவிக்க யார் முயன்றாலும் அனுமதிக்கமாட்டோம் என்று ஒரே குரலில் முழங்கினர். கவிஞர் காந்திமதி மகேஸ்வரன் நன்றி கூறினார்.

இந்த முப்பெரும் விழா, இலக்கிய மழையால் இதயம் நனைத்தது.

-சூர்யா

tamil culture
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe