Advertisment

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒலி ஒளி அமைப்பு சங்கத்தினர்! (படங்கள்)

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதில், தமிழகத்தில் கரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.

Advertisment

மேலும், கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இசைக் கலைஞர்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பினர் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கும் மற்ற துறையினரைப் போலசில தளர்வுகளடனும் கட்டுப்பாடுகளுடனும் தொழில்செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (21.04.2021) ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், அவர்களைகோவில், திருமண நிகழ்ச்சிகளில் 50% பயன்படுத்த அனுமதி கோரியும் அதனை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும்வலியுறுத்தினர்.

Advertisment

valluvar kottam Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe