Advertisment

"நான் நடித்து எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படம் இதுதான்'- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு! 

publive-image

Advertisment

சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த விழா இன்று (22/07/2022) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில், தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என எதிர்பார்க்கவில்லை. பாபா படம் வந்த பின்னரே பாபாவைப் பற்றி பலருக்கும் தெரிந்தது. ரசிகர்கள் இருவர் சன்னியாசி ஆனது மகிழ்ச்சி. இமயமலை சொர்க்கம் போல் காட்சியளிக்கும்; மூலிகையைச் சாப்பிட்டால் ஒரு வாரம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இமயமலையில் உள்ள சித்தர்களுக்கு அசாத்திய சக்தி உண்டு. எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்திக் கொடுத்தது ஸ்ரீராகவேந்திரர், பாபா படங்கள்தான். கடைசி காலத்தில் நோய் இருக்கக் கூடாது; உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில், நடிகரும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.

Chennai rajinikanth Speech
இதையும் படியுங்கள்
Subscribe