Advertisment

சோபியாவுக்கு ஜாமீன் - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

sophia

தூத்துக்குடி நீதிமன்றத்தில் சோபியா ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி முன் சோபியா ஜாமீன் மனு விசாரணை நடைபெற்றது. இன்று 12 மணிக்கு ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீர்ப்பு அளித்த தமிழ்செல்வி, சோபியாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

Advertisment

பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

Advertisment

விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை மதியம் 12.01 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அறையில் தமிழிசை சவுந்தரராஜன், அந்த இளம்பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சோபியாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

பின்னர் அவரை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

sophia tamilisai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe