soori about spb

கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி நலம்பெற நடிகர் சூரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகத் தெரிவித்தது. அதேபோல எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், தனக்கு லேசான கரோனா தொற்றுதான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Advertisment

இதனையடுத்து, அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. இதையடுத்து அவர் உடல்நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்.பி.பி சார், விவரம் தெரிஞ்சு.. உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக் கூட கடந்ததில்ல.. விடியக்காலயா இருந்தாலும் சரி.. வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்.. எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காகப் பாடணும்... உங்க குரலகேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்க ஓடணும்னுஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்..’ என்று குறிப்பிட்டுள்ளார்.