சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் சூரரைப் போற்று. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகியது. இந்நிலையில் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழில் இருந்து இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.