Advertisment

’கோ பேக் மோடி’ என்றவர்கள் ’கம் பேக் மோடி’ என்று சொல்லும் காலம் விரைவில் வரும்: தமிழிசை

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

தமிழகத்தில் கோ பேக் மோடி என்று சொன்னவர்கள் கம் பேக் மோடி என்று சொல்லும் காலம் விரைவில் வரும் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்திற்கு வந்த மோடி, விதவிதமான இராணுவ விமானங்களை பறக்க விட்டார். ஆனால் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர்கள் கறுப்பு பலூனை பறக்க விட்டனர். பாகிஸ்தான்காரர்களை ஓட ஓட விரட்டிய மோடியா, தமிழக சாலையில் பயணிக்க பயப்படுவார்?

தமிழகத்திற்கு மத்திய அரசு நல்ல திட்டங்களை கொண்டு வருவதால் அரசியல்வாதிகளுக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு உள்ளது. ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டும் மு.க.ஸ்டாலின் பின் நாளில் வருத்தப்படுவார். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததை பாஜக தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

கோ பேக் மோடி என சொன்ன தமிழகம் விரைவில் கம் பேக் மோடி என சொல்லும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என ஒரு சில பேர் நம்பிக்கையுடன் சொன்னார்கள். ஆனால் வைகோ ஸ்டாலினுடன் சேர்ந்து உள்ளதால் அது நிச்சயம் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Go Back Modi modi stalin tamilisai vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe