Advertisment

விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்டம்;1000 கோடி ஒதுக்கீடு-ஓபிஎஸ்

1000 crore allocation

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஓபிஎஸ் தாக்கல் செய்து வாசித்து வருகிறார்.8 வது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் பேசினார்.

Advertisment

2019-20 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் சட்ட சபையில் வாசித்தார்.

உரையின் தொடக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி பேசிய ஓபிஎஸ்.

சமூக பாதுகாப்பு உதவி தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய்3,958 கோடி,

விவசாயிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு பயிர் கடன் வழங்க இலக்கு. பழங்கள்,காய்கறிகள் சாகுபடியைஊக்குவிக்க 50 கோடி.

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்,

சென்னையில் 2000 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிலத்தடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.

மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும், முதல் கட்டமாக சென்னை, மதுரை,கோவையில், 500 மின்சாரபேருந்துகள் இயக்கப்படும்.

விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்கு 4 லட்சம்,நிரந்தர ஊனத்திற்கு காப்பீடு தொகை 1 லட்சமாக உயர்வு.மாற்று திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர் வழங்கப்படும்.

புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு 250 கோடி ஒதுக்கீடு.

காவல்துறையை நவீனமயமாக்க 111,57 கோடி ஒதுக்கீடு.பள்ளிக்கல்வி துறைக்கு 28,757 கோடி ஒதுக்கீடு.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் 5259 கோடி ரூபாய் செலவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.

360 பஞ்சயாத்து,128 ஒன்றியங்களில் வேளாண் மேம்பாட்டிற்கு வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க 172 கோடி ஒதுக்கீடு.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது அதற்காக 1000 கோடி நிதி ஒதுக்கீடுஎன தொடர்ந்து வாசித்து வருகிறார்.

budget ops_eps aththikatavu avinasi project
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe