Advertisment

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்கள் 

Sons who fulfilled their father's last wish virudhunagar

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான சுந்தர மகாலிங்கம் (82) கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதிகாலமானார்.சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்த சுந்தர மகாலிங்கம், தனது சிந்தனையில் தோன்றிய பல்வேறு கருத்துகளைப் புத்தகங்களாக எழுதியுள்ளார்.

Advertisment

குருஜி என்ற சிறுகதை புத்தகமும், துரோகம் வெட்கம் அறியாது, காலத்தை அறிந்தால், ஆண்டுகள் பல கழிந்ததால் என்ற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் ஜனசக்தி, தீக்கதிர், உயிரெழுத்து உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதியவர். 2015ஆம்ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய உயிர் சாசனத்தில் தனக்கு சனாதன முறைப்படி எந்தவித சடங்கு சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது எனவும்,என்னுடைய உடலை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொடுத்துவிட வேண்டும் என்றும் எழுதி வைத்ததன் அடிப்படையில் இன்றுசுந்தர மகாலிங்கத்தின் உடலை அவரது மகன்களான திலீபன், கோபி கௌதமன் ஆகியோர்மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தனர். இதில் கௌதமன் நக்கீரன் இதழில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த நிகழ்வின் போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பங்கெடுத்துஆசிரியரும் எழுத்தாளருமான சுந்திரமகாலிங்கத்தின்உடலை ஒப்படைத்து அவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

Advertisment

Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe