soniya

Advertisment

இன்று மாலை மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுகதலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்து வந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி அவர்களும், ராகுல் காந்தியும் தற்போது சென்னை வந்துள்ளனர்.

Advertisment

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தற்போது சென்னை வந்துள்ளனர். அவர்களை எம்பி கனிமொழி மற்றும்தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர்.

K

K

அதேபோல் இவ்விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். கி வீரமணி, வைகோ, டி.ராஜா ஆகிய அரசியல் தலைவர்களும் வருகை தந்துள்ளனர். பாஜ எம்பி சத்ருகன் சின்கா, முத்தரசன், திருமாவளவன், ஜிகே.வாசன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர். கவிஞர் வைரமுத்து, நடிகர் நாசர், பிரபு, வடிவேலு, விவேக், மயில்சாமி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.