Advertisment

மகளிர் உரிமை மாநாடு; தேசிய பெண் தலைவர்கள் சென்னை வருகை

Sonia gandhi Priyanka Gandhi and others participate in Women  Rights Conference

தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உள்ளிட்ட இந்திய கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதனையொட்டி தேசிய தலைவர்கள் சென்னை வரவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைப்பது என வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அரங்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், இருக்கைகள் குறித்து செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன என்பதை முதல்வர் கேட்டறிந்தார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe