
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி சர் கங்காரம் மருத்துவமனையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினத்திற்கு முன்பு மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)