s1

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

கர்நாடக முதல்வராக நாளை மறுதினம் குமாரசாமி பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் அவர் பதவியேற்கவிருக்கும் நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நீடித்தது.

Advertisment

s2

பின்னர் வெளியே வந்த குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளித்துள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் அமைச்சரவை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என்று கூறினார்.

s3