/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/xdgddgdg.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
இதையடுத்து கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பி. குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா உட்பட இசையுலக பிரபலங்கள், பாடகர்கள்,இசை பிரியர்கள் என அனைவரும் தங்களது கோரிக்கைகளை வீடியோ வாயிலாகவும்,சமூக வலைதள பதிவுகள் வாயிலாகவும் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெற்றுவரும் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவரது பாடல்கள் ஒலிக்க விடப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஆறாவது மாடியில் அவரது அறையில் ஸ்பீக்கர்கள் வைத்து அவருடைய பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது. பாடல்களைக் கேட்டு அவர்கரோனாலிவிருந்து மீண்டு விரைவில் குணமடைவார் என இசை பிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Follow Us