Advertisment

பிரதமர் மோடியை விமர்சித்து பாடல் - கைதான கோவன் ஜாமீனில் விடுவிப்பு

kovan

திருச்சியில் கைதான பாடகர் கோவனுக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன், கடந்த மாதம் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை கண்டித்து தனது குழுவினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாகவும், பாடியதாகவும் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் கவுதம், போலீசில் புகார் அளித்தார்.

Advertisment

புகாரின் அடிப்படையில், பாடகர் கோவன் உள்ளிட்ட சிலர் மீது கண்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் இன்று கோவனை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

bail bond prime minister released song
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe