Advertisment

மனிதநேயம் இழந்த மகன்... தாயை காப்பாற்ற முயன்ற வளர்ப்பு நாய்... கலங்கவைக்கும் வீடியோ! 

The son who lost his humanity ... The foster dog who tried to save his mother

Advertisment

நாமக்கல்லில் தாயை நடு சாலையில் வைத்து மகன்தாக்கியநிலையில்வளர்ப்பு நாய் தாயைகாப்பாற்ற முயன்ற வீடியோ காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மனிதாபிமானமற்ற அந்த மகனின் செயல் அனைவராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பொன்னேரிப்பட்டியை சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள். கஷ்டப்பட்டு தனது வங்கி கணக்கில் ஏழு லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். அவருடைய கணவர் இறந்ததையடுத்து அவருக்கு சொந்தமான இடத்தை மகன் சண்முகத்திற்கு எழுதிவைத்துள்ளார் நல்லம்மாள். இந்நிலையில் மூதாட்டி சேமித்து வைத்துள்ள ஏழு லட்ச ரூபாய் தொகையையும் தனக்குத் தர வேண்டும் என சண்முகம், தாய் நல்லம்மாள் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.

The son who lost his humanity ... The foster dog who tried to save his mother

Advertisment

சிறிது கூட மனிதாபிமானம் இல்லாமல் நடு சாலையில் தாயை தரதரவென இழுத்துச் சென்று தாக்கும் அந்த வீடியோ காட்சிகள் பார்ப்போரை கலங்கவைக்கும் அளவிற்கு இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சண்முகம், தாய் நல்லம்மாளைதாக்கும் அந்த வீடியோவில், மூதாட்டி நல்லம்மாள் வளர்த்து வந்த நாய் சண்முகத்திடம்இருந்து நல்லம்மாளைகாப்பாற்ற முயற்சி செய்தது.

பெற்ற மகனே தாயை கொடூரமாக தாக்கியபோது வளர்ப்பு நாய் காப்பாற்ற முயன்ற காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

humanity gone. namakkal police video
இதையும் படியுங்கள்
Subscribe