Advertisment

போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்!

mu

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பொன்னந்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (63). இவர் தினசரி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது மகன் சக்திவேல் வெளிநாட்டில் வேலை செய்து வந்தநிலையில் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். தனது தந்தை தினசரி குடித்து விட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்ததை அறிந்து தந்தையை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபம் அடைந்த சக்திவேல் தனது தந்தையை இரும்பு குழாய் மூலம் அடித்துள்ளார். அப்போது அவரது தந்தை சுருண்டு விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து தூக்கி பார்த்த போது அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது. இதனை அறிந்த கிள்ளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த அவரது மகன் சக்திவேல் தலைமறைவாகியுள்ளார். இவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகிறார்கள். மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
murder
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe