son who incident his mother  third husband

திருச்சி, பாலக்கரையைச் சேர்ந்தவர் பரணி என்கிற பரணி குமார் (வயது 28). சரித்திர பதிவேடு குற்றவாளியான பரணிக்குமார் மீது கோட்டை காவல் நிலையம் , காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது மனைவியான ஜோதிக்கு (45) பரணி குமார் 3வது கணவன் ஆவார். வழக்கொன்றில் சிக்கி சிறையில் இருந்த பரணிக்குமார் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து திரும்பியுள்ளார். பரணிகுமாருக்கும் ஜோதிக்கும் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் வழக்கம்போல் இருவருக்கும் நேற்று இரவு 11 மணி அளவில் தகராறு நடந்தது. இந்தநிலையில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பரணிகுமார் ஜோதியை அடித்துள்ளார். அதனைக் கண்ட ஜோதியின் மகன் மாதேஷ் மற்றும் அவரது நண்பன் டோலு என்கிற முகமது தெளபீக் ஆகிய இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தியதில் பரணி குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடமான தெப்பக்குளம் ஆர்.ஆர்.சபா அருகே விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து தப்பியோடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.