
தாயின் முறையற்ற தொடர்பை கண்டித்த மகன் முறையற்ற தொடர்பிலிருந்த நபரால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவுடையப்பன், சுப்புலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவி சுப்புலட்சுமி டி.எம்.பி காலனி பகுதியில் வசித்து வந்த அவரது உறவினரான சுடலை மணி என்பவரிடம் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு முறையற்ற தொடர்பாக மாறியது. இதனை கணவனான ஆவுடையப்பன் கண்டித்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற சுப்புலட்சுமி சுடலை மணியுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆவுடையப்பனின் மகன் கணேஷ் சில நாட்களுக்கு முன்பு சுடலை மணியின் வீட்டிற்கு நேரில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதே நேரம் தன்னுடைய தாயையும் அவர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தங்களது முறையற்ற உறவுக்கு தடையாக இருந்த மகனை கொல்ல சுப்புலட்சுமி திட்டமிட்டு இது தொடர்பாக சுடலை மணியிடம்கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு டி.எம்.பி காலனி பகுதியில் முகாமிட்டிருந்த சுடலை மணி மற்றும் இன்னொரு நபரும் சேர்ந்து அங்கு பைக்கில் வந்த கணேஷை விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தாய் சுப்புலட்சுமி மற்றும் சுடலை மணி உள்ளிட்டவர்களை கைது செய்யக் கோரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆவுடையப்பன் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தலைமறைவான சுப்புலட்சுமி, சுடலை மணி மற்றும் அவருடன்சேர்ந்து கொலையில் ஈடுபட்டவரைபோலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)