son who compels mother to arrange for marriage for him

Advertisment

ஸ்ரீரங்கம் குஜிலியான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் விஜயகாந்த்(28). இவருடன் பிறந்த மூத்த சகோதரருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாயிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.