The son who buried his mother's body in the middle of the house ... Police investigation!

மயிலாடுதுறையில் உயிரிழந்த தாயின் சடலத்தை வீட்டிற்குள்ளே மகன் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் இந்திராணி. சிறிய ஓலை வீட்டில் வசித்து வந்த இவர், இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்பொழுது வீட்டுக்கு நடுவில் குழி ஒன்று தோண்டப்பட்டு மீண்டும் மூடப்பட்டது போன்ற சுவடுகள் இருந்ததால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழியை தோண்டி பார்த்தபோது அதில் இந்திராணி உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது.

Advertisment

The son who buried his mother's body in the middle of the house ... Police investigation!

இந்திராணியின் மகன் பிரபாகரன் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த இந்திராணியின் உடலை என்ன செய்வதென்றே தெரியாமல் நடுவீட்டில் குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டு அருகிலேயே அமர்ந்து இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரபாகரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் நடுவீட்டில் அடக்கம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.