Advertisment

அப்பாவையே அடித்துக்கொன்ற மகன்; விசாரணையில் அதிர்ச்சி

The son who attacked his father, shocked in the investigation

Advertisment

சொத்துக்காக தந்தையை மகனும் மருமகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம். பேருந்து ஓட்டுனரான செல்வத்தைக் காணவில்லை என அவருடைய மருமகள் சசிகா கடந்த மூன்றாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக மகனும் மருமகனும் ஒன்று சேர்ந்து செல்வத்தை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

திருச்செங்கோடு அருகே திம்மராவுத்தம்பட்டி ஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கொலை செய்த செல்வத்தின் உடலை புதைத்ததாக இருவரும் போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்தனர். அதனடிப்படையில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் செல்வத்தின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செல்வத்தின் மகன், மருமகன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர்என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறு காரணமாக அப்பாவையேமகனும், மருமகனும் ஒன்று சேர்ந்து கொலை செய்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

incident Lake namakkal police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe