Son stabs mother after she slapped him over drunken argument

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மிதுன். மது பழக்கத்திற்கு அடிமையான மிதுன் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல் மிதுன் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனை அவரது தாய் ராஜேஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த மிதுன் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் என்று கூட பார்க்காமல் ராஜேஸ்வரியை வெட்டியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேஸ்வரியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு ராஜேஸ்வரியின் தலையில் தையல் போட்டுள்ளனர். தவலின் பேரில் வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

குடித்துவிட்டு தகராறு செய்ததைத் தட்டிக்கேட்ட தாயை மகனே வெட்டியைச் சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.