Son passes away  border; The mother demanded collector!

Advertisment

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஆயாள்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகன் முல்லைராஜ், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணி புரிந்துவந்திருகிறார்.

இந்நிலையில் நேற்றுக் காலை முல்லைராஜன் திடீரென்று இறந்துவிட்டதாக தாய் அழகம்மாளுக்கு அலைபேசியில் தகவல் வந்திருக்கிறது. இதனால் பதறிய தாய் அழகம்மாள் தன் உறவினரைக் கொண்டு அந்த நம்பரைத் தொடர்பு கொண்டதில் பதில் கிடைக்கவில்லையாம். இதனால் வேதனையடைந்த தாய் இதனைப் புகாராக தென்காசி மாவட்டக் கலெக்டர் அருள் சுந்தர் தயாளனுக்கு அவரது மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்துள்ளார். இதனால் கிராமமே சோகத்திலிருக்கிறது.

இதனிடையே இன்று மக்கள் குறைதீர் கூட்டத்திற்காக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் வந்த கலெக்டர் அருண்சுந்தர் தயாளனின் காலில் விழுந்து கதறிய தாய் அழகம்மாள் என் மகன் இறப்புக்குக் காரணம் தெரியவில்லை. நடந்தவைகளுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபரம் தெரியவேண்டும் என்று மன்றாடியிருக்கிறார்.

Advertisment

உங்களின் மெயில் புகாரை இன்று காலையில் தான் பார்த்தேன். அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை. தேவையான நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லியிருக்கிறார் கலெக்டர்.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இதே ஊரைச் சேர்ந்த ராணுவ வீரர் விஜயகுமார் பனிச்சரிவில் சிக்கி இறந்ததும் குறிப்பிடத்தக்கது. முல்லைராஜனின் மரணத் தகவலால் ஆயாள்பட்டிக் கிராமத்தைக் கனத்த சோகம் சூழ்ந்திருக்கிறது.