Advertisment

தாய் கண்முன்னே விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன்! 

The son passed away in front of police

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நாமக்கல்லில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், பாலமுருகன் தனது தாயை பார்ப்பதற்காக நாமக்கல்லில் இருந்து பேருந்து மூலம் தனது சொந்த ஊரான காமாட்சிபுரத்திற்கு வந்துள்ளார். அவருடன் தனது 8 வயது மகனையும் அழைத்துவந்துள்ளார்.

காமாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்தின் எதிரேயே பாலமுருகனின் வீடு இருக்கிறது. இதனால், மகனையும், பேரனையும் வரவேற்க வீட்டு வாசலிலேயே பாலமுருகனின் தாய் நின்றிருந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய பாலமுருகனும் அவரது மகனும் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக துறையூரில் இருந்து அதிவேகமாக வந்து கார் ஒன்று பாலமுருகன் மீதும் அவரது 8 வயது மகன் மீதும் மோதியது. அதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தனர். மகனும், பேரனும் கண்ணெதிரேயே ரத்த வெள்ளத்தில் இருந்ததைக் கண்ட பாலமுருகனின் தாய் கதறி அழுதார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாலமுருகனையும் அவரது மகனையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

அங்கு பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். அவரது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து தகவலறிந்த துறையூர் போலீஸார் விபத்து குறித்து விசாரணை செய்தும், விபத்தை ஏற்படுத்திய கார் ஒட்டுநரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

accident trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe