பிரிந்து வாழும் தாய் - தந்தை; மகன் எடுத்த விபரீத முடிவு

Son lost their life due to separation of mother and father

தாய் தந்தை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வருவதால் மனமுடைந்தமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சூரம்பட்டி எஸ்.கே.சி, சாலை முதல் வீதியை சேர்ந்த மதிவதனசுந்தரம்(31). பொறியியல் பட்டதாரியான இவர், தந்தை சந்திரசேகருடன் சேர்ந்து மளிகை கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். தந்தை சந்திரசேகரனுக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சந்திரசேகரன் ஈரோடு கரூர் சாலை காந்திஜி வீதியில் தனியாக வசித்து வருகிறார். இதன் காரணமாகமதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதிவதனசுந்தரம், கேஸ் சிலிண்டரில் டியூப் சொருகி, அதனை மூக்கில் வைத்து பின்னர், பிளாஸ்டிக் கவரினை முகத்தில் போட்டு, அந்த சிலிண்டர் வாயுவை சுவாசித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது, வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த சந்திரசேகரன் மகன் இருக்கும் நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மதிவதனசுந்தரத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மதிவதனசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தந்தையர் பிரிந்து வாழ்ந்து வருவதால், மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Erode police
இதையும் படியுங்கள்
Subscribe