/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_64.jpg)
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஒட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர், விவசாயக் கூலி வேலை செய்துவந்தார். கடந்த 2 வார காலமாக செல்வராஜ் சற்று மனச் சோர்வுடன் காணப்பட்டார். இதன் காரணமாக அவரது மனைவி பாலாமணி, தனது கணவரை தா.பேட்டை அருகேஎன்.கருப்பம்பட்டி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.
அப்போது செல்வராஜ், வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், பாலாமணியின் தந்தை சடையன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் செல்வராஜ் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த தா.பேட்டை போலீசார், செல்வராஜ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், செல்வராஜ் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்துபோனாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)