Advertisment

இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை! அதிர்ச்சியை ஏற்படுத்திய மருமகனின் போன் கால்! 

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் மரணமடைந்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே வசித்த வந்த கல்லூரி பேராசிரியர் ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலேயே கார் வாங்குவதற்கு 3 லட்சம் ரூபாய் கேட்டு அனிதாவை கொடுமைப்படுத்தியுள்ளார் ஜீவானந்தம். இதனிடையே ஜீவானந்தம் ஒருநாள் அனிதாவின் தாயாருக்கு போன் செய்து, உன் மகள் தூக்கு போட்டு இறந்துவிட்டாள். வந்த அவளது உடலை தூக்கிக்கொண்டு போ என கூறியுள்ளார்.

Advertisment

woman

இதனால், அதிர்ச்சி அடைந்த அனிதாவின் தாயார், தனது உறவினர்களுடன் மகள் வசித்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது மகள் அனிதா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அனிதாவை கொன்றுவிட்டதாக ஜீவானந்தம் மற்றும் அவனின் தாயார் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஜீவானந்தம் அவனது தாய் லட்சுமி மற்றும் ஜீவானந்தத்தின் பாட்டி ஆகியோரை கைது செய்த பிறகே, அனிதாவின் உடலைப் பெற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

shocked parents incident girl karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe