Advertisment

சொத்துக்காக மாமியாரைக் கொன்ற மருமகன் கைது... பேரன் வெளிநாட்டில் பதுங்கல்!!

பாளையங்கோட்டை ராஜகோபலபுரத்தைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி வெள்ளையம்மாள் (80). கணவர் கடந்த சில ஆண்டுகளுக்குமுன்னர் காலமானதால் வெள்ளையம்மாள் தனியாக வசித்திருக்கிறார். மூத்த குடியான வெள்ளையம்மாளை, பணிப் பெண் இருளம்மாள் என்பவர் கவனித்து வந்திருக்கிறார். வெள்ளையம்மாளுக்கு சொத்துக்கள் இருப்பதால் அதனை அபகரிக்க உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர்.

Advertisment

 Son-in-law arrested for Issue ... grandson hiding abroad

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் கடந்த வருடம் நவ 20ம் தேதி வெள்ளையம்மாள் இறந்து விட, அவர் உடல் நலம் குன்றியதால் மரணமடைந்தார் என உறவினர்கள் கருதினராம். அதே சமயம் பாளையின் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து போலீசார் வெள்ளையம்மாளின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பினர். அறிக்கையில் விஷம் கொடுத்துக் கொலை நடந்தது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து இன்ஸ்பெக்டர் செழியன், எஸ்.ஐ.க்கள், சுப்பிரமணி, முத்தப்பா ஆகியோர் பணிப் பெண் இருளம்மாளிடம் துருவித் துருவி விசாரித்துள்ளனர். அது தொடர்பாக அதே பகுதியின் தேவராஜனைப் பிடித்து உரிய வகையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

 Son-in-law arrested for Issue ... grandson hiding abroad

விசாரணையில் வெளிப்பட்டது குறித்து விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாவது.

இறந்த வெள்ளையம்மாளுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் தனித்து வாழ்ந்தவர் தனது சொத்தின் ஒரு பகுதியை விற்று 24 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். இதனிடையே அவரது மருமகனான தேவராஜன் அவரது மகன் ஜான் பிரகாஷ் இருவரும் சொத்துக்களை அடையவும் மருத்துவச் செலவிற்காகவும் வெள்ளையம்மாளிடம் பணம் கேட்டுள்ளனர். தன் மருமகனுக்கும் பேரனுக்கும் அவர் அதனைக் கொடுக்க மறுத்து விடவே, அது தொடர்பாக கடந்த 20.11.2019 அன்று இவர்களுக்குள் வாக்கு வாதமேற்பட்டுள்ளது. அது சமயம் வெள்ளையம்மாளின் வாயைப் பிடித்து அவளது தொண்டையில் பூச்சிக் கொல்லி விஷத்தை ஊற்றியுள்ளனர். இதனால் விஷவாடை வெளியே தெரியவில்லை. இயற்கையாக மரணமடைந்தார் என அவரது இதர உறவினர்கள் கருதினர். ஆனால் உடற்கூறு ஆய்வில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது. அம்பலமானது.

இதன் பின் கொலை தொடர்பாக தன் மகன் ஜான் பிரகாஷ் போலீசிடம் சிக்காமலிருக்க தந்தை தேவராஜன் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க, தேவராஜன் மட்டும் சிக்கியுள்ளார். தொடர்ந்து வெளிநாட்டிலிருக்கும் ஜான்பிரகாஷைக் கொண்டு வர மாநகர போலீஸ் துணை கமிசனரான சரவணன் நடவடிக்கையை மேற் கொண்டுள்ளதாக நம்மிடம் பேசியவர்,

வெள்ளையம்மாள் மரணமடைந்த போது நாங்கள் வழக்கம் போல் தற்கொலை எனப்படும் 174 பிரிவில் தான் வழக்குப் பதிவு செய்தோம். ஆனால் உடற்கூறு ஆய்வில் விஷம் கொடுக்கப்பட்டது. தெரிய வரவே, பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் தேவராஜனைப் பிடித்து விசாரணை செய்தோம். நடந்தவைகளை சொல்லி விட்டார் அவரைக் கைது செய்திருக்கிறோம் என்றார்.

குற்றச் செயல்களில் ஜெகஜாலக்கில்லாடியேயானாலும் கிடைக்கும் ஒருதுரும்பு அளவு ஆதாரம் கூட அவனைச் சிக்க வைத்து விடும்.

police incident Palayankottai nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe