மாமனாரை பைப்பால் அடித்து கொன்ற மருமகன் கைது! 

Son-in-law arrested for beating father-in-law with pipe

அரியலூர் மாவட்டம் மெய்க்காவல் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (63). இவர் தனது மகள் ஜெயந்தி என்பவரை அதே பகுதியில் உள்ள சின்னபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திலக் என்பவருக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொடுத்துள்ளார். அந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் திலக் - ஜெயந்தி தம்பதியருக்கு இடையே கடந்த மாதம் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜெயந்தி, பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று (19.10.2021) தனது மாமனார் செல்வராஜ் வீட்டுக்குச் சென்ற திலக், தனது மனைவிக்கும் தனக்கும் தகராறு நடந்தது குறித்து மாமனாரிடம் புகார் கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திலக் கடும் கோபத்துடன் அருகில் கிடந்த பிவிசி பிளாஸ்டிக் பைப்பை எடுத்து மாமனார் செல்வராஜை கடுமையாக தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த செல்வராஜை அவரது உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மருத்துவமனை டாக்டர்கள், செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து திலக் மீது மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரையடுத்து திலக்கை போலீசார் கைது செய்தனர். மாமனாரைக் கொலை செய்த மருமகனின் செயல் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ariyalur Husband and wife
இதையும் படியுங்கள்
Subscribe