Son-in-law and mother-in-law incident in cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(35). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி ஜானகிராமன் பண்ருட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.அப்போது மாமியாரை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரது மாமியார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இந்த செய்தி வெளியே தெரிந்ததால் அவமானம் தாங்க முடியாமல் ஜானகிராமன் தூக்கில் தொங்கினார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.