Advertisment

தந்தையை அடித்துக்கொன்ற மகன்- குடியே காரணம் என வாக்குமூலம்

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த தென்றல் நகர் பகுதில் வசிப்பர் அசோக்குமார். இசை கற்றுதரும் ஆசிரியராக உள்ளார். இவரது மகன் 25 வயது பிரகதீஸ்வரன். அசோக்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

Advertisment

murder

இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்து சண்டை நடக்குமாம். ஆகஸ்ட் 16ந்தேதி இரவும் குடித்துவிட்டு வந்துள்ளார். வீட்டில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் அசோக்குமார்க்கும் அவரது மகன் பிரகதீஸ்வரன்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

மகனை அசோக்குமார் அடிக்கபாய கோபத்தில் அருகில் இருந்த இரும்புராடால் தந்தையை பிரகதீஷ்வரன் தாக்கியதாக தெரிகிறது. மண்டையில் தாக்கியதால் சம்பவயிடத்திலேயே அசோக்குமார் இறந்துள்ளார். இதில் அதிர்ச்சியாகியுள்ளார் பிரகதீஷ்வரன், இந்த தகவல் அக்கம் வீடுகளுக்கு பரவி தெரு மக்கள் அந்த வீட்டு முன் கூடியுள்ளனர்.

murder

இந்த தகவல் வாலாஜாபேட்டை போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அங்கு சென்று இரவே உடலை கைபற்றிய போலீசார் உடல்கூறு ஆய்விற்காக வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இரும்புராடால் தந்தையை அடித்து கொலை செய்த பிரகதீசுவரனை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்ற வாலாஜாப்பேட்டை போலீசார், உண்மையில் குடிபோதையில் தகராறு செய்ததால் தான் அடித்தாரா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Vellore police murder father
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe