Advertisment

தந்தையை ஓட ஓட வெட்டிக் கொன்ற மகன்; புதுக்கோட்டையில் பரபரப்பு

Son incident his father in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரைச் சேர்ந்தவர் மாதவன்(55).கம்பி கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மகள் மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் இறந்துவிட்டார். இந்த நிலையில், இவரது கடைசி மகன்சதீஷ்குமார் (30). பி.இ.பட்டதாரி.அயல்நாட்டில் சிறிது காலம் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பிய சதீஷ்குமார், சிறிது காலம் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது அண்ணன் மஞ்சள் காமாலை தாக்கி இறந்துள்ளார். அது முதல் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

சென்னையில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஒன்றரை வருடமாகச் சொந்த ஊர் பரம்பூருக்கு வந்து தந்தை நடத்தி வரும் இரும்பு கடையில் அவருக்குத்துணையாக இருந்துள்ளார். மேலும், மனநலம் பாதிப்புக்கு மாத்திரை உண்டு வந்த அவர் சில நாட்களாக மாத்திரை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் வீட்டில் இருந்த தந்தை மாதவனிடம் இன்று காலை செலவிற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தர மறுத்த தந்தை மாதவனை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

Advertisment

இதற்குப் பயந்து வீட்டிலிருந்து வெளியே சாலைக்கு ஓடி வந்த மாதவனை துரத்தி வந்து சதீஷ்குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சாவகாசமாக வீட்டுக்குள் போய் அமர்ந்துவிட்டார். மகனே தந்தையைவெட்டிக் கொன்ற சம்பவம் பரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த அன்னவாசல் போலீசார், குற்றவாளி சதீஷ்குமாரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

police pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe