/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72332.jpg)
தூத்துக்குடியில் சொத்துக்காக தந்தையை மகனே காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சின்னதுரை. ஆழந்தா எனும் கிராமத்தில் 80 வயதான கருப்பசாமிக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை விற்ற முதியவர் கருப்புசாமி அதிலிருந்து வந்த24 லட்சம் ரூபாயை சின்னத்துரையின் இரண்டு மகன்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகன்கள் பெயரில் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தை எடுத்துக் கொடுக்குமாறு தந்தை கருப்புசாமியிடம் சின்னதுரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தோட்டத்திற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தந்தை கருப்பசாமி மீது சின்னதுரை காரை மோதிவிட்டு கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow Us