சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரெயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணித்தனர். பரங்கிமலை ரயில்நிலையத்தில் பக்கவாட்டு சுவரில் மோதி பயணிகள் சிலர் கீழே விழுந்தனர். இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் சிலர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பலியானவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வந்த சிவக்குமார் என்ற மாணவனும் உயிரிழந்தார். தகவலை அறிந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு சிவக்குமார் தாயார் கதறி அழுதார். சிவக்குமார் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். உடனே அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது.