Advertisment

மகன் இறப்பில் சந்தேகம் என தந்தை புகார் - இரண்டு பேர் கைது செய்து போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ஐய்யனார் (வயது 25) என்ற வாலிபர் டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் ஓட்டுநராக பணிசெய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி காலையில் கூ.நத்தம் கிராம எல்லையில் உள்ள ஒரு விவசாயி கிணற்றில் சுமார் 75 அடி ஆழத்தில் நைலான் கயிற்றில் இறந்து தூக்கில் தொங்கினார்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கோவிந்தன் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

Advertisment

police-station

போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுமலை மகன் ஆனந்தராஜ் என்பவர் திருநாவலூர் போலீசாரிடம் உண்மை வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி போலீசார் இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆனந்தராஜ் , ஹரி ஆகிய இரண்டு வாலிபர்களையும் அதிரடியாக கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் கைது செய்த இரண்டு நபர்களையும்மாவட்ட எஸ்பி.ஜெயக்குமார் அவர்கள் கைது செய்வதற்கு முன்பு காவல் நிலையம் வந்து நேரில் விசாரணை நடத்தினார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

arrest complaint police father murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe