Skip to main content

இளைய மகளிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு மூத்த மகள், மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை... 

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

தங்கள் மரணம் யாருக்கும் சுமையாக இருக்கக்ககூடாது என்பதற்காக இறுதி சடங்குக்கு தேவையான தொகையை தந்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்லடம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது சின்னகாளிபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகனும், செல்வி மற்றும் சாந்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவனை இழந்த செல்வி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துரைராஜுடன் இருந்து வந்தனர். இளைய மகள் சாந்தி இடுவாய் கிராமத்தில் வசித்து வருகிறார்.
 

Incident



இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் துரைராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் போய் பார்த்துள்ளனர். அங்கு துரைராஜ், செல்வி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். அதில் துரைராஜ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். செல்விக்கு உயிர் இருக்கிறது என்று அக்கம் பக்கத்தினர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

இந்த தகவல் இடுவாய் கிராமத்தில் இருந்த இளைய மகள் சாந்திக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் பதறிப்போய் சின்னகாளிபாளையம் வந்துள்ளார். அப்போது அவர், இதுக்குத்தான் பணம் கொடுத்தியா? என்று கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. 


 

 

நேற்று திடீரென கோபாலகிருஷ்ணன் இடுவாய் கிராமத்திற்கு சென்று தங்கை சாந்தியிடம், ரூபாய் 30 ஆயிரம் கொடுத்துள்ளார். எதற்கு என்று சாந்தி கேட்டதற்கு, அவசர செலவிற்கு தேவைப்படும் என்று சொல்லியுள்ளார். மீண்டும் மீண்டும் சாந்தி கேட்டதற்கு, வைத்துக்கொள் அவசர செலவுக்கு தேவைப்படும் என்று சொல்லியுள்ளார். அண்ணன் இப்படி சொல்லும்போது மறுக்காமல் வாங்கிக்கொண்டுள்ளார் சாந்தி. 
 

தங்கள் மரணம் யாருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என்று நினைத்த துரைராஜ், தனது மகன் கோபாலகிருஷ்ணனை விட்டு சாந்தியிடம் பணம் கொடுக்க சொல்லியிருக்கிறார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது. துரைராஜ் மகன், மகளுடன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள், தங்கள் சொத்த பணத்திலேயே இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்று நினைத்தது ஏன். அவர்களின் மன கஷ்டம் என்ன உள்ளிட்ட பல கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை. 


 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறிந்த அதிமுக கூட்டணி; தலைவர்களைப் புகழ்ந்த பிரதமர் மோடி

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Broken ADMK alliance PM Modi praised the leaders

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கொங்கு பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கொங்கு பகுதியானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜவுளி துறையிலும் சிறந்து விளங்குகிறது. தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக திருப்பூர் திகழ்கிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.

தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி தனது உரையை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

மதுரையில் சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பல்லடம் வரும் பிரதமர் மோடி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi is coming to many

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கதிட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.