Advertisment

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய 65 வயது தந்தை; கொடூரமாக தாக்கிய மகன்!

Son beaten 65-year-old father who was looking  woman second marriage!

சேலம் சூரமலங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார்(65) - சண்முகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு தமிழழகன்(23), மற்றும் 17 வயது மகள் உள்பட இருவர் உள்ளனர். செல்வகுமார் வனவராக பறியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மூத்தமகன் தமிழழகன்(23) பட்டப்படிப்பு முடித்துவிட்டு இரு சக்கர வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இளையமகன் தனியார் பள்ளி ஒன்றியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே மன நலம் பாதிக்கப்பட்ட சண்முகவள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

அதன்பிறகு செல்வகுமார் மற்றும் அவரது இரு மகன்கள் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து செல்வகுமாருக்கு மறுமணம் செய்ய ஆசை வந்துள்ளது. அதற்காக நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ஆத்திரமடைந்த மூத்தமகன் தமிழழகன் தந்தை செல்வகுமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அதன்பிறகு நேற்று காலையிலும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே செல்வகுமார் தனது மகன் தமிழழகனை தாக்கியுள்ளார். அதனால் கோபமடைந்த தமிழழகன் பதிலுக்கு செல்வகுமாரை தாக்கியதோடு வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தையும் அறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிந்து தமிழழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police father Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe