Son arrested who attacked his father near trichy

திருச்சி மாவட்டம், முசிறி வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துவேல்(60), என்பவருக்கு சாந்தகுமார்(36), முரளிதரன்(31) என இரு மகன்கள் உள்ளனர். சாந்தகுமார் சென்னையில் வசித்து வருகிறார். முரளிதரன் திருமணம் ஆன நிலையில் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தன் மனைவி மற்றும் தந்தை முத்துவேலுடன் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு சென்னையில் இருந்து மூத்த மகன் சாந்தகுமார், தந்தையைப் பார்க்க வெள்ளாளப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தந்தை முத்துவேலிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கையில் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தந்தை முத்துவேல் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் முத்துவேல் அலறி துடித்துள்ளார். முத்துவேல் சத்தம் போட்டதைக் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் முத்துவேலுவைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முத்துவேல் ஜெகநாதபுரம் போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீசார் சாந்தகுமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment