தகராறு செய்த சித்தப்பா.. கத்தியால் குத்திய மகன்.. 

Son arrested in uncle case

குமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள தும்பக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (45), வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது தம்பி சுரேஷ் (43) கூலி வேலை செய்துவந்தார். இவர்களுடைய தாயார் நாகம்மாள், ராஜன் வீட்டில் வசித்துவந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கரோனா தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட மறுநாள் உடல்நலக் குறைவால் அவர் இறந்தார். இது சுரேஷ்க்கு அதிர்ச்சியும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

தன்னுடைய அண்ணன் மனைவி, தடுப்பூசி போட்ட அம்மாவை சரியாக கவனிக்காததால் தாயார் இறந்துபோனதாக கூறி தினமும் சுரேஷ், மது அருந்திவிட்டு அண்ணியிடம் தகராறு செய்துவந்திருக்கிறார். அதேபோல்தான், நேற்று (27.08.2021) மாலையிலும் சுரேஷ் மது போதையில் அண்ணியிடம் தகராறு செய்து, வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷின் மனைவி, வெந்நீர் காய்த்து சுரேஷ் மீது ஊற்றியுள்ளார். அப்போதும் சுரேஷ் அங்கிருந்து போகாமல் அவரது அண்ணியையும் அவர் மகனையும் தாக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் மகன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து சித்தப்பா சுரேஷை 31 இடத்தில் குத்திக் கொலை செய்தார். இது அக்கம்பக்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தாயையும் மகனையும் குலசேகரம் போலீசார் கைது செய்தனர்.

Kanyakumari police
இதையும் படியுங்கள்
Subscribe