Advertisment

தந்தையை தடியால் தாக்கி கொலை செய்த மகன் கைது!! 

Son arrested for beating father

Advertisment

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயது விவசாயி வரதராஜன். இவரது மனைவி 55 வயது ஜோதி. இவர்களுக்கு சாந்தி (37) என்ற மகளும், ராஜா (35) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனித்தனி வீடுகளில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், தந்தை வரதராஜுக்கும்மகன் ராஜாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துவந்துள்ளது.

இதன் காரணமாக நேற்று (19.10.2021) மாலை தந்தை, மகன் இருவருக்குமிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜா தனது தந்தை வரதராஜன் மீது தடி கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வரதராஜ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ராஜாவை கைது செய்துள்ளனர். பெற்ற தந்தையைக் கொலை செய்த மகனின் செயல் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

son father Perambalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe