Advertisment

அர்ஜூன் சம்பத் மகனின் வெறுப்பு பேச்சு; நீதிபதி காட்டம்!

Son of Arjun Sampath who apologized for dispute opinion

கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், நக்கீரன் இதழ் குறித்தும் நக்கீரன் ஆசிரியர் குறித்து வெறுப்பு கருத்துக்களைப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜீ மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய ஓம்கர் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஓம்கார் பாலாஜி, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கபதாக தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறக்கபிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

apology covai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe